ஆறு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகின் பிற பகுதிகளை விட ஆசியா கடுமையான பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைக்கும் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்துள்ளன. இவற்றில் கணிசமான பகுதி வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக உலக சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
எனினும், ஈரானின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க கடற்படை மேற்கொண்டு வரும் முற்றுகை காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாகக் குறைந்து, மிகக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஆசிய நாடுகளில் எரிபொருள் விநியோகம், உற்பத்திச் செலவு, மின்சாரக் கட்டணங்கள் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார துறைகளில் அழுத்தம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, எரிசக்தி இறக்குமதியை அதிகளவில் நம்பியுள்ள ஆசிய பொருளாதாரங்களுக்கு ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பெரும் சவாலாக மாறியுள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலிகளில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
Â






3 Comments