Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மயில்சாமி அண்ணாதுரை கூறும் அசத்தல் அப்டேட்!

இந்திய விஞ்ஞானிகள் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது, ''செயற்கை நுண்ணறிவின் தாக்கம் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு ஏற்றவாறு மாணவர்களும், கல்வி நிறுவனங்களும் தயாராக வேண்டும். மேலும், இந்த காலகட்டம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் காலமாக இருக்கும்.

முன்னதாக விமானப் பயணம் சவாலாக இருந்தது. ஆனால் தற்போது அது எளிதாகிவிட்டது. அதேபோல, விண்வெளிப் பயணமும் இப்போது எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.

விண்வெளிக்குச் செல்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன. 72 வயது பெண்மணியே மீண்டும் விண்வெளிக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் அளவிற்கு விண்வெளிப் பயணம் தற்போது எளிதாகியுள்ளது.

இருப்பினும் இப்பயணங்களை ஒரு வருடம் முன்பே திட்டமிட வேண்டியது அவசியம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாதந்தோறும் ஒரு சரக்குக் கலன் சென்று வந்தாக வேண்டும்," என்று அவர் கூறினார்.

சுனிதா வில்லியம்சின் பெருமை: மேலும் அவர் கூறும்போது, "ஒரு வருடத்திற்கு சுமார் 100 டன் எரிபொருள் கொண்டு செல்லப்படுவதால் அடிக்கடி கலன்கள் சென்று வரும். அங்கு எப்போதும் 7 முதல் 8 நபர்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் போயிங் கலனில் சென்றபோது ஏற்பட்ட பழுது காரணமாக உடனடியாக வேறு கலனை அனுப்ப முடியவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமானவை. சுனிதா வில்லியம்ஸ் இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார். விண்வெளியில் அதிக தூரம் மாரத்தான் ஓடியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

பூமிக்கு திரும்புவதற்கு முன்பு வரை அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக இருந்தார். அவரது சிறந்த உடல் மற்றும் மனநலமே அவரை அந்தப் பொறுப்பில் சிறப்பாக வழிநடத்த உதவியது.

சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்தவர். தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து வருகிறார். சர்வதேச விண்வெளி நிலையம் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் விதமாகவே செயல்பட்டு வருகிறது.

இந்திய விஞ்ஞானிகள் ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று தங்கி இருந்து ஆராய்ச்சி செய்யும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் நிறைவேறும்.

விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் ஆளில்லா கலன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி முடிவுகளை எளிதில் கொண்டு வரவும் இத்தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுகிறது.

இஸ்ரோ அனுப்பியுள்ள செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா முழுவதும் இப்போதே இணையதள சேவையை வழங்க முடியும். குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது," என்றும் அவர் கூறினார்.

அத்துடன், "தனியார் துறையில் ராக்கெட்டுகளை அனுப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. பெரிய ஏவுதளங்கள் தேவையில்லை. குறைந்த எரிபொருள் செலவில் ராக்கெட்டுகளை அனுப்பக்கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் விளங்குகிறது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு பெண்ணால் எவ்வளவு காலம் விண்வெளியில் இருக்க முடியும் என்பதை சுனிதா வில்லியம்ஸ் நிரூபித்திருக்கிறார். 10 நாட்களில் திரும்ப வேண்டியவர் அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு அவரது உடல்நலம் சிறப்பாக இருந்தது.

விண்வெளிக்கு சென்று வருபவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானதுதான். உடலில் பல மாற்றங்கள் இருக்கும். பூமிக்கு வந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். அதைத் தவிர வேறு எந்தப் பெரிய பிரச்சனையும் இருக்காது.'' என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...