Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

விஜய் கண்டிப்பாக பதில் கூற வேண்டும் - விளாசிய பிரேமலதா

குதிரை பேரம் புகார் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதில் கூற வேண்டும் என சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க அரசு அமைந்தது.

இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து,

சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், புதன்கிழமை நடைபெறும் கூட்டத் தொடரில் த.வெ.க அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சட்டசபையில் எம்.எல்.ஏ-கள் அரசு குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, தே.மு.தி.க எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, “எதிர்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து அரசியலில் மாண்பை ஏற்படுத்தி இருப்பது வரவேற்கதக்கது. அதேபோன்று உங்கள் முதல் அறிவிப்பிலேயே சிங்க பெண் பாதுகாப்பு மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.Â

வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையிலே இன்றைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இந்த தருணத்தில் முதல் முறையாக மன வேதனையோடு நான் பதியவைக்கிறேன். இங்கு குதிரை பேரம் நடந்ததாக இன்றைக்கு எதிக்கட்சிகள் அனைத்தும் சொல்லும் போது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத ஒரு விஷயம், அதுவும் இந்த அவையில் அதை பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக நான் மனம் வேதனை அடைகிறேன்.

அதேபோன்று இங்கு முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை வெளிப்படையான ஆட்சி தான் செய்வோம் என்று முதல்வர் விஜய் கூறினார். அப்படி இருக்கையில் முதல்வரை சந்திக்க யார் முகத்தை மூடிக் கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால் அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட ஒரு தலைக்குனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவைக்கு எதுவும் கிடையாது என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் முதல்வர் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...