Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஒரு தரப்பை மட்டும் முதல்வர் சந்தித்தது ஏன்?

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

கடந்த மே 10-ந் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய், அன்றைய தினமே இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு என 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதேபோல் 9 துறைகளுக்கான அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதன்பிறகு மே 11-ந் தேதி சட்டசபை தொடங்கப்பட்ட நிலையில், அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்த முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுனரிடம் சமர்பித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...