Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

டாஸ்மாக் கட்டண வசூல் முறையில் அதிரடி மாற்றம்: அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் முக்கிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தனியார் தரப்புகளுக்கு சென்றதாகக் கூறப்படும் தொகை, இனி நேரடியாக அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடியும், ஆண்டுக்கு ரூ.1,200 கோடியும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கு கூடுதல் கட்டணமாக ஹாட் (Hard) மதுபானப் பெட்டிக்கு ரூ.90, பீர் பெட்டிக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இந்த வகையில் சுமார் ரூ.100 கோடி ரூபாய் வரை வசூலாகி வந்த நிலையில், புதிய நடைமுறையின் கீழ் அந்தத் தொகை முழுமையாக அரசின் கஜானாவிற்கு செலுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் காணப்பட்டதாகக் கூறப்படும் நிதி கசிவுகளைத் தடுத்து, அரசுக்கு வரவேண்டிய வருவாயை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன், டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள 21 வயது வயது வரம்பை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காலி மதுபான பாட்டில்களை மீளச் சேகரிக்கும் திட்டத்தையும் மேலும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், வருவாய் முகாமைத்துவத்தில் அதிக கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...