Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

தமிழகத்தில் முதலீடுகளை எளிதாக்க புதிய ஆணையம் !

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையம், காடு மற்றும் நிலம், நகர அமைப்பு, தீயணைப்புப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான 22 மாநில சட்டங்களை ஒருங்கிணைத்து, பொதுவான முதலீட்டு வசதி கட்டமைப்பை உருவாக்கும்.

ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுகளைக் கொண்ட திட்டங்கள், குறைந்தபட்சம் 5,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தாராள வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டினரின் முதலீடுகள் உள்ளிட்ட பெரிய மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு இந்த ஆணையம் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தும்.

தொழில் துறைச் செயலாளர் ஆணையத்தின் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். ஆணையத்தில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் இடம்பெறுவதுடன், முதலீடு மற்றும் தொழில் துறைகளைச் சேர்ந்த ஐந்து நிபுணர்கள் வரை சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற முடியும்.

மேலும், மாநில நோடல் முகமைகள், ஒற்றைச் சாளரக் குழுக்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்துறை பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டும் இதுவரை மேம்படுத்தப்படாமல் உள்ள நிலங்களையும் ஆணையம் ஆய்வு செய்யும். குறிப்பாக சிப்காட், டிட்கோ, சிட்கோ, தாஹ்ட்கோ மற்றும் எல்காட் உள்ளிட்ட மாநில முகமைகளால் ஒதுக்கப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தொழில் முதலீடுகளுக்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களை விரைவுபடுத்தும் வகையில் காலக்கெடுவையும் மசோதா ஒழுங்குபடுத்துகிறது.

மாநில சட்டங்கள் அல்லது துணைச் சட்டங்களில் ஒப்புதலுக்காக 21 நாட்களுக்கு மேல் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலக்கெடு குறிப்பிடப்படாமல் இருந்தாலோ, பொதுவாக அந்த ஒப்புதலுக்கான காலவரம்பு 21 நாட்களாகக் கருதப்படும்.

எனினும், மத்தியச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே நீண்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், இந்த விதி அதனை மாற்றாது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் முக்கிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தனியார் தரப்புகளுக்கு சென்றதாகக் கூறப்படும் தொகை, இனி நேரடியாக அரசின் கணக்கில் வர...