Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாளிலேயே டிஜிட்டல் உரிமம் !

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்துத் துறை அலுவலக சேவைகளில் “Anywhere Registration / Licensing” வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் ஆவணங்களின் உண்மைத்தன்மையை மின்னணு முறையில் சரிபார்க்க முடியும்.

ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அவற்றை மீண்டும் இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் முக்கிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தனியார் தரப்புகளுக்கு சென்றதாகக் கூறப்படும் தொகை, இனி நேரடியாக அரசின் கணக்கில் வர...