Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கத்தார் மீது குண்டுவீசியதை வெளிப்படையாக பெருமையுடன் தெரிவித்த நெதன்யாகு !

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இஸ்ரேலின் i24NEWS ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய நெதன்யாகு, “நான் கத்தார் மீது தாக்குதல் நடத்தினேன், குண்டுவீசினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நேர்காணலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இந்தக் கருத்துகள், 2025 செப்டம்பர் 9ஆம் திகதி தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் வெளியாகியுள்ளன.

தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் கூடி, அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட காஸா போர் நிறுத்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தனர்.

கத்தார் நீண்டகாலமாக மத்திய கிழக்கு மோதல்களில் மத்தியஸ்தப் பங்காற்றி வரும் நிலையில், 2012ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அரசியல் அலுவலகத்தையும் தோஹாவில் நடத்த அனுமதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்ததாக கத்தார் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டித்ததுடன், அது “சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல்” எனத் தெரிவித்திருந்தது. கத்தார் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் மஜெட் அல்-அன்சாரி, இந்தத் தாக்குதலை “கோழைத்தனமான” நடவடிக்கை என விமர்சித்தார்.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தாக்குதலைக் கண்டித்தன. மேலும், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் தாக்குதலுக்குப் பின்னர் கத்தாருக்கு விஜயம் செய்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தாக்குதல் கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை “அப்பட்டமாக மீறியுள்ளதாக” தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அதே மாதத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, நெதன்யாகுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தாக்குதலுக்காக மன்னிப்புக் கோரியிருந்தனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய பேச்சுவார்த்தை தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்ய ஜ...