சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய குர்திஷ் பெண்கள் படையான YPJ, புதிய அரசாங்கத்துடன் தனது இராணுவப் பங்களிப்பைத் தொடர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படையுடன் (SDF) இணைந்து செயல்பட்ட YPJ, சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து ஐ.எஸ். அமைப்பை அகற்றும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியது.
2024ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்தது. இதையடுத்து, தன்னாட்சி முறையில் இயங்கி வந்த ஆயுதக் குழுக்களை அரச நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் SDF அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டதுடன், அதன் தளபதி மஸ்லூம் அப்தி அதிபர் அகமது அல்-ஷராவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். SDF உறுப்பினர்களில் பலர் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், YPJ தனது அமைப்புசார்ந்த இராணுவப் படையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான மாற்று வழிகள் குறித்து சிரிய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் சிரியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், YPJ-யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.






3 Comments