Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மார்க் ரஃபலோவுக்கு 180-க்கும் மேற்பட்ட யூத பிரமுகர்கள் ஆதரவு !

ஹாலிவுட் நடிகர் மார்க் ரஃபலோவுக்கு ஆதரவாக 180-க்கும் மேற்பட்ட முக்கிய யூத பிரமுகர்கள் புதன்கிழமை குரல் கொடுத்துள்ளனர். பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனங்களின் சர்ச்சைக்குரிய இணைப்பு முயற்சியை ரஃபலோ எதிர்த்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

‘தி ஹல்க்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களின் மூலம் பிரபலமான ரஃபலோ, பாரமவுண்ட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை 111 பில்லியன் டொலருக்கு கையகப்படுத்தும் முயற்சியை விமர்சித்திருந்தார். காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் இஸ்ரேலிய இராணுவத்துடனான தொடர்புகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாரமவுண்ட் நிறுவனம், ரஃபலோவின் கருத்துகள் “யூத எதிர்ப்பு கருத்துருக்களை” பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியது. குறிப்பாக, நிறுவன வர்த்தக நடவடிக்கை தொடர்பாக “இனப்படுகொலை” மற்றும் “நிறவெறி” போன்ற சொற்களை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த நிறுவனம் தெரிவித்தது.

எனினும், பாரமவுண்ட்டின் குற்றச்சாட்டை ரஃபலோ கடுமையாக மறுத்துள்ளார். இஸ்ரேலிய அரசின் கொள்கைகள், இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகளை விமர்சிப்பது யூத மக்களை விமர்சிப்பதாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இஸ்ரேலின் காஸா நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீதான விமர்சனங்களை யூத எதிர்ப்பாக சித்தரிப்பது தொடர்பான விவாதத்தையும் இந்த விவகாரம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...