நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளதுடன், 4,858 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய 6,541 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே நான்கு சிறப்பு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் படையினர் அனுப்பப்பட்ட நிலையில், ஐந்தாவது விமானமும் நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் 11 மீட்புக் குழுவினரும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.






3 Comments