சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் “சட்டவிரோதமானவை” எனக் கூறியுள்ளார் என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் மேலும், மத்திய கிழக்கு தற்போது ஒரு “முக்கிய திருப்புமுனையில்” உள்ளதாகவும், பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்ய விரிவான போர்நிறுத்தம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இரு தரப்புகளுக்கும் இடையிலான நேரடி உரையாடல் முக்கியம் என்றும் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, அமெரிக்கா–இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா எடுத்த “திடமான நிலைப்பாட்டை” பாராட்டியுள்ளார். மேலும், தெஹ்ரான்–பெய்ஜிங் ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






3 Comments