மத்திய கிழக்கின் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா–ஈரான் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய படைகள் அமெரிக்க கப்பல்களை குறிவைக்க முயன்றால், அவை “பூமியின் முகத்தில் இருந்து அழிக்கப்படும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திங்களன்று Fox Newsக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், ஈரானிய தரப்பு முன்பைவிட “இணக்கமான நிலைப்பாட்டில்” இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அவரது சமூக ஊடக தளமான Truth Socialல் வெளியிட்ட பதிவில், ஜலசந்தியில் அமெரிக்க இராணுவம் ஏழு ஈரானிய படகுகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தற்போது சோதனைக்குள்ளாகியுள்ளதாகவும், அது தொடருமா என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான பதிலை வழங்கவில்லை மேலும், இரு நாடுகளுக்கும் முன் இரண்டு வழிகள் உள்ளன என அவர் குறிப்பிட்டார்






3 Comments