சீனாவின் ஹுனான் மாகாணம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததுடன், 61 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்து, ஹுனான் மாகாணத்தின் தலைநகரமான சாங்ஷாவில் திங்கள்கிழமை மாலை சுமார் 4:40 மணியளவில் இடம்பெற்றதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்திற்குப் பிறகு வெளியான காணொளிகளில், சம்பவ இடத்தில் இருந்து அடர்ந்த புகை எழுந்ததுடன், கட்டிடங்கள் இடிந்து விழுந்து, குப்பைகள் சுற்றுவட்டாரத்தில் சிதறிக் கிடந்தது காணப்படுகிறது.
சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஹுவாஷெங் பட்டாசு நிறுவனம் என்ற நிறுவனத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய விரைவான மற்றும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனா உலகின் மிகப்பெரிய பட்டாசு உற்பத்தியாளராக இருந்து, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1.14 பில்லியன் டொலர் மதிப்பிலான பட்டாசுகளை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சிகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






3 Comments