அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்ததாக காங்கிரஸுக்கு அறிவித்துள்ளார். இதனால் போர் அதிகாரச் சட்டத்தின் கீழ் உள்ள 60 நாள் காலக்கெடு தமக்கு பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டப்படி, ஜனாதிபதி இராணுவ நடவடிக்கையை தொடங்கிய 60 நாட்களுக்குள் காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும்; இல்லையெனில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ட்ரம்ப் காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஏப்ரல் 7 முதல் அமெரிக்கா–ஈரான் இடையே எந்தத் துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை என்றும், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய நடவடிக்கைகள் தற்போது முடிவடைந்துவிட்டதால் அனுமதி காலக்கெடு பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments