மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள நயாரிட் மாநிலத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாரிகளின் தகவலின்படி, ஜாலிஸ்கோ மாநிலத்திலிருந்து பயணித்த அந்த பேருந்து நெடுஞ்சாலையில் இருந்து விலகி அமட்லான் டி கனாஸ் நகரம் அருகே கவிழ்ந்தது.
பயணிகள் அனைவரும் நயாரிட் மாநிலத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் நயாரிட் மற்றும் ஜாலிஸ்கோ மாநிலங்களின் அவசர மீட்பு குழுக்கள் விரைந்து செயல்பட்டு, மீட்பு பணிகளை மேற்கொண்டன. விசாரணை காரணமாக அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
விபத்தில் சிக்கிய பேருந்து சேற்றில் கவிழ்ந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக மெக்சிகோவில், நெடுஞ்சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. கடந்த மாதங்களில் கூட பல பெரிய பேருந்து விபத்துகள் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன.
மெக்சிகோவில் பயணிகள் ரயில் வசதிகள் குறைவாக இருப்பதால் பேருந்துகள் முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளன. இதனால் நெடுஞ்சாலை பாதுகாப்பு குறித்து அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






3 Comments