மியான்மர் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், ராணுவத்தின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல பகுதிகளை இழந்த ராணுவம், தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய வீரர்களை இணைத்து அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறது.
இதற்கிடையில், எதிர்ப்புப் படைகளுக்குள் காணப்படும் ஒற்றுமையின்மை மற்றும் சீனாவின் அழுத்தம் காரணமாக கிளர்ச்சிக் குழுக்கள் பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது முதலீடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் சீனா அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகிறது.
மேலும், மியான்மர் தலைவரான மின் ஆங் ஹலைங், ஆயுதக் குழுக்கள் ஜூலை 31-க்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 8 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், “போர் முடிவுக்கு வர வேண்டும்” என மக்கள் வேதனை வெளியிட்டு வருகின்றனர்.
ராணுவத்தின் புதிய முன்னேற்றம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் மோதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.






3 Comments