அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மீண்டும் ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமெரிக்க ராணுவ மத்திய கட்டளையகம் ‘சென்ட்காம்’ புதிய தாக்குதல் திட்டங்களை விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான டன் ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடி பொருட்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய திட்டத்தின் கீழ், ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது, ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் அதிநவீன “டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக்” ஏவுகணைகளை பயன்படுத்தும் வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்திலும் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






3 Comments