பிரிட்டன் மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா ஆகியோர் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணத்திற்காக அமெரிக்கா சென்றடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் தரையிறங்கிய அவர்கள், பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றனர் அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் நடைபெற்ற சந்திப்பில், இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது அதனைத் தொடர்ந்து, மன்னர் மற்றும் ராணி பிரிட்டிஷ் தூதரின் இல்லத்தில் நடைபெற்ற தோட்ட விருந்திலும் பங்கேற்றனர். இதில் அரசியல் மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விஜயம், இங்கிலாந்து ஆட்சியிலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதின் 250ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகளுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இரண்டு தசாப்தங்களுக்கு பின் ஒரு பிரிட்டிஷ் மன்னர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, காங்கிரஸில் உரையாற்றுதல், வெள்ளை மாளிகையில் மாநில விருந்து உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் மன்னர் சார்லஸ் பங்கேற்க உள்ளார். இருநாடுகளுக்கிடையிலான நீண்டநாள் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments