நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி 23 சிறுவர்களை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kogi State பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு பின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 15 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனினும் எஞ்சியுள்ள 8 சிறுவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தாக்குதல் நடைபெற்ற போது அந்த இல்லத்தின் உரிமையாளரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவத்திற்குப் பின்னால் Boko Haram தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
Nigeriaவில் அண்மைக் காலங்களில் பணயத் தொகைக்காக கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது முதன்முறையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதனால் கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.






3 Comments