ரஷ்ய ட்ரோன் தாக்குதல் மீண்டும் உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசா மீது நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள், வாகனங்கள், ஹோட்டல்கள், கிடங்குகள் மற்றும் புனிகுலர் ரயில்வே உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மூன்று மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாகவும், பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்ததாகவும், துறைமுகப் பகுதியிலும் சேதம் ஏற்பட்டதாகவும் ஒடேசா ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்துள்ளார்.






3 Comments