ஜப்பான் வடக்கு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ஹொக்கைடோ தீவில் உள்ள சரபெட்சு நகரத்திற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் எந்த சேதமோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments