வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வெடிப்புச் சத்தம் கேட்ட உடனேயே அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து டிரம்பை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.
டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை ரகசிய சேவை அதிகாரிகள் மேடையிலிருந்து அழைத்துச் சென்றதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பிறகு பேசிய அதிகாரி ஒருவர் புதிய அறிவிப்பு வரும் என்றும் அதன் பிறகு விருந்து தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த நிகழ்வு முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.






3 Comments