தெற்கு லெபனானில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் டெபல் கிராமத்தில், இயேசு கிறிஸ்து அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேலிய வீரர் ஒருவர் கோடரியால் அந்தச் சிலையை சேதப்படுத்தும் காட்சி வெளியாகியதையடுத்து, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட வீரர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், லெபனானுக்கான வத்திக்கான் தூதர் பேராயர் பாலோ போர்ஜியா தலைமையில் சென்ற இத்தாலிய அமைதிப்படை வீரர்கள், அக்கிராமத்திற்கு புதிய இயேசு சிலையினை வழங்கினர்.
கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்ட டெபல் கிராம மக்கள், புதிய சிலையினை தேவாலய மணிகள் முழங்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
“மன்னித்தலே எமது மதத்தின் அடிப்படை” எனக் குறிப்பிட்ட அப்பகுதி பங்குத்தந்தை இஸ்ரேலின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இந்தச் செயல் தங்களுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்த முயற்சியைப் பாராட்டி, இது “நம்பிக்கை மற்றும் உரையாடலின் வலிமையான செய்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments