Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

அமெரிக்க வீரர் மீது வழக்கு: மதுரோ நடவடிக்கையின் ரகசிய தகவலை வைத்து சூதாட்டம் !

வெனிசுவேலாவின் ஜனாதிபதி Nicolás Maduro தொடர்பான இராணுவ நடவடிக்கையின் ரகசிய தகவலை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாகக் கூறி, அமெரிக்க விசேட படை வீரர் ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் விசேட படையில் மாஸ்டர் சார்ஜென்டாக பணியாற்றும் 38 வயதான கேனான் வான் டைக் என்ற வீரர், மதுரோவை கைது செய்யும் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதும், அதனை முன்கூட்டியே அறிந்திருந்த வான் டைக், Polymarket என்ற எதிர்வுகூறல் சந்தையில் பந்தயம் வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரோ பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வியில் அவர் சுமார் 33,000 அமெரிக்க டொலர்கள் வரை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அந்த நிகழ்வு நடந்ததையடுத்து, அவர் சுமார் 400,000 அமெரிக்க டொலர்கள் வரை லாபம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தைப் பெற்றதன் பின்னர் தனது கணக்கை நீக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக, நியூயோர்க் நகரின் Manhattan பகுதியில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் மோசடி மற்றும் ரகசிய தகவல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது குற்றம் சாட்டப்பட்ட வீரர் 250,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இராணுவ அனுமதி இல்லாமல் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, எதிர்வுகூறல் சந்தைகளில் ரகசிய தகவல்களை பயன்படுத்தி லாபம் ஈட்டியதாக அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்த முதல் குற்றவியல் வழக்காகக் கருதப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...