கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களை, அடித்தள ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் எனவும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அமைப்பது மற்றும் அவை தொடர்ந்து செயல்படுவது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிராம மக்களின் நேரடிப் பங்கேற்பு, உள்ளாட்சி அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் கிராம சபைகளை உண்மையான அடித்தள ஜனநாயக அமைப்பாக மாற்ற முடியும் என்றும் கமல்ஹாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments