Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்தியுங்கள் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

மாணவர்களின் குழந்தைப் பருவம் கல்விச் சுமைகளால் தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்வதுடன், பாடப்புத்தகங்களையும் பாடத்திட்டங்களையும் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியுடன் அவர்களின் தனிப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களுக்கு வெளியே சென்று, குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நாம் இன்னும் அதிகமாகச் செல்ல வேண்டும். குழந்தைப் பருவம் அழிந்துவிட அனுமதிக்கக் கூடாது. குழந்தைப் பருவத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஆசிரியருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது” என மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளிடையே அதிகரித்து வரும் திரை அடிமைத்தனம் (screen addiction) உள்ளிட்ட பிரச்சினைகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் கல்வித் திறனுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் சமூக, படைப்பாற்றல் மற்றும் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் கல்வியாளரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுகளின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 48 பாடசாலை ஆசிரியர்களை செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவிக்கவுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...