மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
விழாவையொட்டி ஆய்வுப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், எம்.எல்.ஏ. முஸ்தபா, கோபிசன், கருப்பையா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தரப்பில் சுமார் 9,000 விஐபி பாஸ்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரப்பட்டுப் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.






3 Comments