தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் வழக்கில், தொழிலதிபர் பிரவீன் கணேசனை சென்னை சைபர் கிரைம் போலீசார் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம், முதலமைச்சர் விஜய் குறித்து பிரவீன் கணேசன் சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்ட போதிலும், அது சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரவீன் கணேசனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த அவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அடையாளம் கண்டு போலீசாரிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அவர் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் சமூக வலைதளப் பதிவு, அதன் பின்னணி மற்றும் அந்தக் கணக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பதிவில், தன்னை சி.எஸ்.ஐ.எஃப். மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், தமக்கு எதிரான வழக்கு குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments