Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு இன்று !

இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு இன்று (06) கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நினைவு நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள Palm Court Mansion கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

கட்சியின் முதலாவது தலைவராக டி.எஸ். சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன், எச்.டபிள்யூ. அமரசூரிய செயலாளராக நியமிக்கப்பட்டார். முக்கிய முஸ்லிம் தலைவரான சர் ராசிக் பரீத் மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோர் இணைப் பொருளாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் உத்தியோகபூர்வ நிறமாக பச்சை தெரிவு செய்யப்பட்டதுடன், அதன் சின்னமாக நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானை தேர்ந்தெடுக்கப்பட்டது.

1946ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை வகித்துள்ளனர்.

ரணசிங்க பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன் தற்போது வரை கட்சியின் தலைவராக தொடர்கிறார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக்கூட்டங்கள் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றன “Two years strong. Progress for all” என்ற தொனிப்பொருளில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதுஇதன...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல்...

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ...