Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பதவியேற்பு!

தமிழகத்தில் த.வெ.க கூட்டணி ஆட்சியில் 17-வது சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகரன் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்ற சில கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த புதிய அரசின் செயல்பாடுகள் தொடங்கும் விதமாக, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று முறைப்படி தொடங்கியது. இக்கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக (எம்.எல்.ஏ.) பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முறைப்படி தங்களது பதவிப் பிரமாணத்தை உறுதிமொழி எடுத்து நிறைவேற்றினர்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டமன்றத்தின் அடுத்தகட்ட நிகழ்வாக, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. இப்பதவிகளுக்கு வேறு யாரும் போட்டியிடாத காரணத்தினால், சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வுக்குப் பின்னர், மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.

அப்போது பேசிய அ.ம.மு.க சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தொடர்ந்து 5 ஆண்டு காலம் நல்லாட்சி வழங்க வேண்டும் என்று தனது ஆதரவைத் தெரிவித்தார். தற்போது சட்டமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...