Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

விஜயை புகழ்ந்து பேசிய அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ்

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டத்தில் ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பதவியேற்றார், அப்போது பேசிய அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் த.வெ.க அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டமன்ற மரபுப்படி, புதிய சபாநாயகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், பேரவை முன்னவர் செங்கோட்டையனும் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதனைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற சபாநாயகருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்குச் சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய அ.ம.மு.க சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், இந்த அரசு ஐந்து ஆண்டு காலமும் முழுமையாக அமையப் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். தற்போதைய சட்டமன்றத்தில் இளைஞர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். முதல்வர் ஒரு சிறந்த இளைஞராக இருப்பதால், நிச்சயம் ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவார் என்ற எதிர்பார்ப்பு தமக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் சூழல் காரணமாகக் கடந்த காலங்களில் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், தற்போதைய முதல்வரால் ஒரு திறமையான ஆட்சியை வழங்க முடியும் என்று காமராஜ் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, முதல்வர் முதல் கையெழுத்திட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு உதவும் சிறந்த திட்டங்கள் என்று அவர் பாராட்டினார். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது சென்னை மாநகரம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாகவும், காவல்துறை சிறப்பாகச் செயல்படுவதாகவும் அவர் வியப்பு தெரிவித்தார்.

தமிழக இளைஞர்கள் மற்றும் தங்களைப் போன்றவர்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவித்ததற்காக முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், த.வெ.க. தலைமை அமைச்சரவை தொடர்வதற்குத் தனது ஆதரவையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...