Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

பின்னணியை விளக்கிய அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி +2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகித அதிகரிப்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மும்மொழிக் கொள்கை மற்றும் பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கான எதிர்ப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

திருச்சி தென்னூரில் உள்ள தமது இல்லத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; +2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 0.17 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், கூடுதலான தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தேர்ச்சி விகிதத்தை தலைவர் ஸ்டாலின் அவரிடம் தெரிவித்ததுபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். திருச்சி மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல அரசு பள்ளிகள் தேர்ச்சி விதத்தில் முதல் 3வது இடத்தை பெற்றது இன்னும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, பல்வேறு பாடங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் மட்டும் 83 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், வரும் காலங்களில் மாணவர்களும் தேர்ச்சிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றியதால் தான் இந்த தேர்ச்சியை தர முடிந்தது, ரிசல்ட் என்பது வாழ்க்கை அல்ல, நாம் நம்மை அறிந்து கொள்வதற்கும் என்ன தெரிந்துகொண்டோம் என்பதற்கான ஒரு தேர்வு தான், தேர்ச்சி பெற இயலாதவர்கள் துணைத் தேர்வில் மனம் தளராமல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். பி.எம் ஸ்ரீ எதனால் நாங்கள் வேண்டாம் என்பதனை பல நேரங்களில் விளக்கி சொல்லி இருக்கிறோம், அதில் உள்ள சிக்கல்களையும் மதயானை என்ற புத்தகத்தின் வாயிலாகவும் அடுக்கடுக்காக தெரிவித்துள்ளோம், அரசியல் பார்க்காமல் இதனை எதிர்க்கிறோம்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...