Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

குற்றாலம் அருவி கட்டுமானப் பணிகளுக்கு ஐகோர்ட் தடை!

சுற்றுலா வளர்ச்சியை விட வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதே முக்கியம். குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் புதிய ஆர்ச் கட்டுமானப் பணியின் போது 2,000 ஆண்டுகள் பழமையான பாறை சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தடை விதித்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆர்ச் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் புதிய நுழைவு வாயில் அமைக்கும் பணியின் போது, அங்கிருந்த பழமையான சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலைகள் இயந்திரங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அங்கிருந்த சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிகாரிகளின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சுற்றுலா வளர்ச்சியை விடவும் 2,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பயணிகளின் வசதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் சிலைகளைப் பாதுகாப்பதில் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், மறு உத்தரவு வரும் வரை அருவிப் பகுதியில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தடை விதித்ததோடு, சிற்பங்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...