நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) 108 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., பெரும்பான்மை எட்டவில்லை என்றாலும், இது தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்தக் கட்சியும் பெறாததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைய உள்ளது.
இதற்கிடையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
த.வெ.க. தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராக வலுவான அரசியல் முகமாக உதயநிதி இருப்பார் என திமுக தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments