Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

த.வெ.க தொண்டர்களால் திருப்பலி பாதிப்பு இல்லை!

சமீபத்தில் வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹாவிற்கு விஜய் வர இருப்பதாக முன்கூட்டியே தகவல் வெளியானது. அதிகாலை வேளாங்கண்ணி சர்ச்சில் நடைபெறும் திருப்பலியில் விஜய் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் பரவியது. இதனால் அதிகாலையிலேயே த.வெ.க தொண்டர்கள் விஜய்யைக் காண்பதற்கு வேளாங்கண்ணி சர்ச் முன்பு திரண்டனர்.

சர்ச் உள்ளேவும், முகப்புப் பகுதியிலும் பெரும் கூட்டம் கூடியதால் வழிபாட்டிற்கு வந்தவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக கூறப்பட்டது. மேலும், த.வெ.க தொண்டர்களால் திருப்பலி தாமதமானது என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி ஆலய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், "2-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய் வேளாங்கண்ணி வருவதாக ஊடகங்கள் வழியாக செய்தி பரவி வந்தது.

நிர்வாகத்தை பொறுத்த வரை எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. வழக்கமாக நாங்கள் ஆலயத்தை காலை திறக்கும் பொழுது த.வெ.க தொண்டர்கள் விஜயை பார்ப்பதற்காக குவிந்தனர். அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், காலை 5:30 மணிக்கு திருப்பலிக்கான ஜெபம் ஏற்பாடு செய்யும் பொழுது கொஞ்சம் சலசலப்பாக இருந்தது. தமிழக வெற்றிக் கழகம் வாழ்க என்று சொன்னதால் குருக்கள் அங்கு சென்று விஜய் வரவில்லை. நாங்கள் வழிபாட்டை தொடங்க இருக்கிறோம் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றார். பிறகு காலை வழிபாடானது ஆரம்பிக்கப்பட்டது.

அந்த தொண்டர்கள் வந்ததால் வழிபாடு 15 முதல் 30 நிமிடங்கள் தாமதமாக நடைபெற்றதாக ஒரு தவறான செய்தி ஊடகங்களில் பரவி இருக்கின்றன. முதலாவதாக இது மே மாதம் விடுமுறை என்பதால் அதிகம் பேர் திரண்டிருந்தார்கள். இரண்டாவதாக முதல் சனிக்கிழமை என்பதால் வழக்கமாக வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வந்தது. 3-வது சனிக்கிழமை என்பதால் ஆயர் வரவேண்டிய நிகழ்வு இருந்தது. எனவே இந்த 3 விஷயத்தால், இனிமேல் இதுபோன்ற நிகழ்வு நடக்கக் கூடாது என்பதால் நாங்கள் நாகை மாவட்ட காவல்துறையினரிடம் கேட்டு கொண்டதற்கு ஏற்ப அவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்ட கேட்டபோது விஜய் வரவில்லை அவரது சார்பில் ஆனந்த் வருவார் என்று சொன்னார்கள். மற்ற எல்லா தலைவர்களையும் போல நாங்கள் அவர்களையும் வரவேற்றோம்” என்றார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...