Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி!

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி வாக்குகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. குறிப்பாக, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தனது கோட்டையைத் தக்கவைக்க அ.தி.மு.க மும்முரம் காட்டி வருகிறது.

பெரும்பாலான எக்ஸிட் போல் (Exit Poll) முடிவுகள் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும் ஆக்ஸிஸ் மை இந்தியா, ஜே.வி.சி ஆகியவை அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன. எக்ஸிட் போல் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கருத்துக் கணிப்பு முடிவுகளை எண்ணி யாரும் கலங்க வேண்டாம், அ.தி.மு.க வெற்றி பெறும் என்றும் அ.தி.மு.க வின்னிங், நல்லாட்சி கம்மிங் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க இந்த தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்டுள்ள நிலையில், சில கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க கூட்டணி 114 முதல் 147 இடங்கள் வரை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. மற்ற சில கருத்துக் கணிப்புகள் ஆளுங்கட்சியான தி.மு.க மற்றும் புதிதாகக் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றின் போட்டியைச் சுட்டிக்காட்டுகின்றன. எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்வார் எனப் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க-வின் இந்தத் தேர்தல் செயல்பாடு, கட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா-சாவா' போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்திற்கும், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைத் தக்கவைக்கும் திறனுக்கும் இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாகும். கட்சியின் வலுவான கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு மண்டல மாவட்டங்களில் பதிவாகியுள்ள 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு, அ.தி.மு.க-விற்குச் சாதகமான அலையை ஏற்படுத்தும் எனத் தொண்டர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் முடிவுகளின் உடனுக்குடன் நேரலைத் தகவல்களைத் தொடர்ந்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், தொழில் தொடங்குவதையும் நடத்துவதையும் மேலும் எளிதாக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிமுகப்பட...

தமிழகத்தில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவ...

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்தடை குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் மற்றும் அதிருப்திகள் எழுந்து வந்த நிலையில், மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்...