மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மோசமான வானிலை நிலவிய நிலையில், வியாழக்கிழமை மாலை சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் முதற்கட்டமாக நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு பெண்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டிருந்தன.
சனிக்கிழமை மீட்கப்பட்டவர்கள் ஆறு மற்றும் ஐந்து வயது சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர். ஐந்து வயது சிறுவனின் தந்தை மற்றும் உறவினர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவனும் அவரது குடும்பமும் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சிறுவனின் தந்தை காமராஜ் ஜபல்பூரில் ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த துயர சம்பவம் தொடர்பாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






3 Comments