புனே நகரில் வட்கான் பாலம் பகுதியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் மும்பை–பெங்களூரு நெடுஞ்சாலையை சனிக்கிழமை மறித்தனர்.
இரவு 7 மணியளவில் வட்கான் பாலம் அருகிலுள்ள சுவர்ணா ஹோட்டல் முன்பாக பெருமளவில் கூடிய போராட்டக்காரர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தால் மும்பை–சதாரா இடையிலான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஹிம்மத் ஜாதவ் தெரிவித்ததாவது, “போராட்டம் காரணமாக இரு திசைகளிலும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு, புனே மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் புனே–சதாரா நெடுஞ்சாலையையும் மறித்திருந்தனர். பின்னர் போலீசார் விரைவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கலைக்கப்பட்டது.






3 Comments