இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 91 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி நாணயத் தாள்களுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது .
சந்தேகநபர்களிடமிருந்து போலி 5000 ரூபா நாணயத் தாள்கள் இரண்டும் போலி 2000 ரூபா நாணயத் தாள்கள் 21-உம் கைப்பற்றப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25, 29, 30, 32, 35 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இம்புல்கொட தெஹிபிட்டிய பெலெந்த மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






3 Comments