Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் உயிரிழப்பு!

மொனராகலை – கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உழவு இயந்திரம் ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் லொறியில் பயணித்த பத்துப் பேரில் எட்டுப் பேர் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த ஆர்.டி. ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (21) மற்றும் தாரக மதுஷான் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஏ.எம். திலகரத்ன பண்டாரவும் பசிந்து தினேஷும் தந்தை மற்றும் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குடும்பத்தினருடன் பூஜை வழிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு சாரதிகள் கைது

விபத்திற்குள்ளான டிப்பர் லொறியின் சாரதியும் பயணிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...