Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

தெஹிவளை படுகொலையின் பிரதான சந்தேகநபர் கைது!

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுகொலையின் பின்னர் கண்டிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது .

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையைக் கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலையைச் செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொஸ்மல்லி எனும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதுடன் கொலையுண்ட நபர் படோவிட அஸங்க என்பவரின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகின்றது.

இவர்கள் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படை...