Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டமை மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மூலம் கிடைத்த அனுபவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

“ஒரு தந்தையால் தனது பிள்ளைக்குக் கொடுக்க முடியாத அனுபவங்களை, நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளன. இதனால் எனது தந்தை மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியடைகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துவரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, நாமல் ராஜபக்ச நேற்று (21.08.2026) முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தந்தை எதிர்பார்க்கும் முதிர்ச்சி

இந்த விசாரணைகள் தொடர்பில் அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச என்ன கூறுகிறார் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, இத்தகைய அனுபவங்களால் தனது மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைந்து வருவதாகவும், யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வார் எனவும் தனது தந்தை நம்புவதாகக் குறிப்பிட்டார்.

ஹோட்டல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்

“தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அதனை எவ்வாறு வாங்கினார் என்பதை அவரால் கூற முடியாதபோது, அந்த ஹோட்டல் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறுகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தினரும் நல்லாட்சி அரசாங்கத்தினரும் தேர்தல் மேடைகளில், நாட்டிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் எனக்குச் சொந்தமானவை எனக் கூறினர். டுபாய் மெரியட் ஹோட்டலும் என்னுடையது எனத் தெரிவித்தனர்.

அப்போது ஊழல் ஒழிப்புக் குழுவில் இருந்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் இருக்கின்றனர். எனவே, அன்று அவர்கள் கூறிய பொய்களையும் தாங்களே புனைந்த குற்றச்சாட்டுகளையும் தற்போது சட்டபூர்வமாக்க முயற்சிக்கின்றனர்” என நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

தங்களை விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் முன்னிலையாகி, விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...