கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் முன்பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட காரணங்களால் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் ஒருநபர் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் அவசர சேவை பிரிவினர் அந்த நபரை பாதுகாப்பாக கீழிறக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த நபர் இவ்வாறு செயலில் ஈடுபட்டதற்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்






3 Comments