Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ரிலாவல சந்தியில் விபத்து பல்கலைக்கழக மாணவன் படுகாயம்!

அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ ரிலாவல சந்தியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வீதியின் குறுக்கே கிரிகம்பமுனுவ திசைக்குத் திரும்பியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள

இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளன மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது எதிர்த் திசையிலிருந்த அதிர்ஷ்டச் சீட்டு விற்பனை நிலையம் ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துகையே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதியை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...