Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

வர்த்தக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 47 சீனப் பிரஜைகளும் இரண்டு மலேசியப் பிரஜைகளும் ஒரு இந்தியப் பிரஜையும் அடங்குகின்றனர்.

நீர்க்கொழும்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்த போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை விரைவில் நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...