Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மகரகமவில் வீட்டின் மீது தீ வைப்புக்கான காரணம் கண்டுப்புடிப்பு!

மகரகம பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மகரகம பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே நேற்று மாலை இந்தத் தீ பரவியது பின்னர் அதனைக் கண்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது வீட்டிற்குள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த இரண்டு ஆண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர் அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தின் தலைவருமே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டின் அறையொன்றிற்குள் குறித்த குடும்பத் தலைவரின் 55 வயது மனைவியும் 16 வயது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான வீட்டின் உரிமையாளரும் இன்று காலை உயிரிழந்துள்ளதாக மகரகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...