Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர் கைது!

பெருந்தொகையான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது
கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இரண்டு பயணப் பொதிகளுக்குள் 5 பொதிகளாக பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 401 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர்களை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தெஹிவளை ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2026.07.23 ...

கொழும்பு கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்க...