Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

நானுஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நுவரெலியா நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மாத்தளை உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இருவருக...

நாவலப்பிட்டி கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த 13 பேரும் நாவலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்...

ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.கடந்த புதன்கிழமை டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று...