நுவரெலியா மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் இரண்டு மகன்கள் உட்பட மூவர் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்து 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞன் மாநகரசபை உறுப்பினரின் இரு மகன்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாநகரசபை உறுப்பினரிடம் வினவியபோது காவல்துறையினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய தனது இரண்டு மகன்களையும் இன்று காவல்துறையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments